அடித்தடடுமக்களுக்கு அரசின் திட்டங்களை கொண்டு சேர்க்க வேண்டும் என்று திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் கூறினார்
அடித்தடடுமக்களுக்கு அரசின் திட்டங்களை கொண்டு சேர்க்க வேண்டும் என்று திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் கூறினார்
அனுப்பர்பாளையம்:
அடித்தடடுமக்களுக்கு அரசின் திட்டங்களை கொண்டு சேர்க்க வேண்டும் என்று திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் கூறினார்.
புத்தாக்க பயிற்சி
திருப்பூர் மாநகர சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் வட்டார அளவில் மக்கள் பிரதிநிதிகளுக்கான ஒருநாள் புத்தாக்க பயிற்சி திருப்பூர் அவினாசி ரோட்டில் உள்ள தனியார் ஓட்டல் அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார் பாடி தலைமை தாங்கினார். துணை மேயர் பாலசுப்பிரமணியம் முன்னிலை வகித்தார்.
குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெயலதா வரவேற்றார். திருப்பூர் மாநகராட்சி மேயர் ந.தினேஷ்குமார் பயிற்சியை தொடங்கி வைத்து பேசியதாவது:- இந்தியாவில் திட்டங்களை செயல்படுத்துவதில், அனைத்து மாநிலங்களுக்கும் முன்மாதிரியாக தமிழகம் விளங்குகிறது. தமிழகத்தில் உள்ள திட்டங்களை மற்ற மாநிலங்களில் செயல்படுத்தக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக அரசின் திட்டங்களை மக்களுக்கு கொண்டு சேர்க்கும் கருவியாகநாம் செயல்பட வேண்டும்.
நலத்திட்டம்
திருப்பூரில் மாமன்ற உறுப்பினர்களாக வெற்றிப் பெற்றுள்ளவர்கள் உங்கள் பகுதியில் உள்ள அடித்தட்டு மக்களுக்கு, அரசின் நல்ல திட்டங்களை கொண்டு சேர்க்க வேண்டும். மக்களின் நலனை பாதுகாக்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது. குறிப்பாக கர்ப்பிணி பெண்களுக்கு அரசின் திட்டங்களை செயல்படுத்துவதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இந்த பயிற்சியை நன்கு பயன்படுத்தி பொதுமக்களுக்கு உதவியாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இதில் வட்டார ஒருங்கிணைப்பாளர் சிவரஞ்சனி, மாமன்ற உறுப்பினர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.