வாணியம்பாடியில் வரி செலுத்தாத தோல் தொழிற்சாலையின் குடிநீர் இணைப்பு துண்டிப்பு
வாணியம்பாடியில் வரி செலுத்தாத தோல் தொழிற்சாலையின் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
வாணியம்பாடி
வாணியம்பாடி நகராட்சி பணியாளர்கள் வீடு, வீடாகச் சென்று வரிவசூல், குடிநீர் கட்டணம் செலுத்தக் கோரி பலமுறை வலியுறுத்தியும், நகரின் முக்கிய பகுதியில் உள்ள தோல் தொழிற்சாலைக்கு வழங்கப்பட்டுள்ள குடிநீர் இணைப்புக்கு நீண்டநாட்களாக கட்டணம் செலுத்தாமலும், அதே பகுதியில் உள்ள வீட்டிற்கான குடிநீர் கட்டணத்தையும் செலுத்தாமல் இருந்ததை தொடர்ந்து நகராட்சி அதிகாரிகள் சம்பந்தப்பட்ட தோல் தொழிற்சாலைக்கு சென்று குடிநீர் இணைப்பை துண்டித்தனர்.
மேலும் வாணியம்பாடி நகர பகுதியில் உடனடியாக நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிகளை செலுத்தாவிட்டால் தொடர்ந்து இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.