வாணியம்பாடியில் கர்நாடக அரசை கண்டித்து முஸ்லிம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
கர்நாடக அரசை கண்டித்து முஸ்லிம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;
வாணியம்பாடி
இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர தடை விதித்த கர்நாடக அரசை கண்டித்தும், கர்நாடக ஐகோர்ட்டு அளித்த தீர்ப்பை கண்டித்தும் வாணியம்பாடி பஸ் நிலையம் அருகே உள்ள எல்.ஐ.சி. அலுவலகம் முன்பாக ஜாயின்ட் ஆக்சன் கமிட்டி சார்பில் இஸ்லாமியர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு அமைப்பின் தலைவர் நாசிர்கான் தலைமை தாங்கினார். ஓவைசி கட்சி மாநில தலைவர் வக்கீல் அகமது, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர தலைவர் எஸ்.எஸ்.பி.பாருக், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் ஜாவித் அகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னாள் எம்.எல்.ஏ. அப்துல் பாசித், மற்றும் பலர் சிறப்புரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் சமூக சேவகர் நரி முகமது நையீம் மற்றும் நகரமன்ற உறுப்பினர்கள், தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டு கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.