கிராம தங்கல் திட்டத்தின் கீழ் அேசாலா பாசி உற்பத்தி பயிற்சி அளிக்கப்பட்டது
கிராம தங்கல் திட்டத்தின் கீழ் அேசாலா பாசி உற்பத்தி பயிற்சி அளிக்கப்பட்டது
தளி:
கிராம தங்கல் திட்டத்தின் கீழ் அேசாலா பாசி உற்பத்தி பயிற்சி அளிக்கப்பட்டது.
சாகுபடி
உடுமலை சுற்றுப்புற பகுதியில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. விவசாயிகள் சாகுபடி பணிகளுடன் சேர்த்து சுயதொழிலாக ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர். நிலமற்ற கூலி தொழிலாளர்களுக்கும் கால்நடை வளர்ப்பு அன்றாட வருமானத்தை அளித்து கை கொடுத்து உதவுகிறது.ஆனால் கால்நடை வளர்ப்புக்கு பெரும் சவாலாக இருப்பது தீவனம் சேகரித்தல் ஆகும். பசுந்தீவனம், அடர் கலப்புத்தீவனம், உலர் தீவனம் போன்றவை சுழற்சி முறையில் கால்நடைகளுக்கு அன்றாடம் அளிக்க வேண்டி உள்ளது. அப்போது தான் கறவை மாடுகள் மூலம் சீரான முறையில் பால் உற்பத்தியை பெறுவதற்கு இயலும்.
தற்போது கோடை காலம் தொடங்கி விட்டதால் கால்நடைகளுக்கு தீவன தட்டுப்பாடு ஏற்படும் சூழல் நிலவுகிறது. இதனால் அசோலா பாசி மூலம் தீவன உற்பத்தியை பெருக்கும் வழிமுறைகளை கிராம தங்கல் திட்டத்தின் கீழ் வாணவராயர் வேளாண்மை கல்லூரியைச் சேர்ந்த மாணவிகள் விவசாயிகளுக்கு அளித்து வருகின்றனர்.
இது குறித்த செயல்முறை விளக்கம் தளியை அடுத்த கரட்டூர் பகுதியில் உள்ள அரசு கால்நடை மருந்தகத்தில் மருத்துவர் அரவிந்தன் தலைமையில் நடைபெற்றது.
இது குறித்து மாணவிகள் கூறியதாவது:-
அசோலா பாசி
அசோலா பாசி புரதச்சத்து மிகுந்த தீவனம் ஆகும். இதனை தண்ணீரில் வளர்த்துக் கொள்ளலாம். இதற்காக தொட்டியில் மாட்டுச்சாணம், மணல், மண் இவற்றுடன் நுண்ணூட்டச் சத்துக்கு பாஸ்பரஸ் உள்ளிட்டவற்றை தண்ணீரில் கலக்கி அதனுடன் ஒரு கைப்பிடியளவு அசோலா பாசியை தூவிவிட வேண்டும்.ஒரு வாரத்திற்குள் பாசி தண்ணீரில் படர்ந்து வளர்ந்து விடும்.அதனை நாள்தோறும் அரை கிலோ அளவு எடுத்து ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடைகளுக்கு தனியாகவோ தீவனத்துடனோ கலந்து கொடுக்கலாம்.
இதனால் கால்நடைகளுக்கு தேவையான சத்துக்கள் கிடைப்பதால் அவை ஆரோக்கியமாக இருக்கும். தொட்டியை மாதத்திற்கு ஒருமுறை சுத்தம் செய்தால் போதுமானது என்று தெரிவித்தனர்.
அதைத் தொடர்ந்து அசோலா பாசியில் உள்ள சத்துக்கள், வளர்ப்பதற்கான இடம் தேர்வு செய்தல், வளர்ப்பு முறை பராமரிப்பு மற்றும் பயன்கள் உள்ளிட்டவற்றை விவசாயிகளுக்கு விரிவாக எடுத்துக் கூறினார்கள்.
இதில் விவசாயிகள், கால்நடைவளர்ப்போர், கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர்.