ஆதிஜெகநாத பெருமாள்கோவில் தேரோட்டம்

பங்குனி உத்திரத் திருவிழாவையொட்டி திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோவிலில் நடந்த தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

Update: 2022-03-18 13:48 GMT
ராமநாதபுரம், 
பங்குனி உத்திரத் திருவிழாவையொட்டி திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோவிலில் நடந்த தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
பங்குனி உத்திர திருவிழா
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி பகுதியில் உள்ள ஆதி ஜெகநாத பெருமாள் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. 
இந்த நிலையில் திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோவிலில் இந்த ஆண்டின் பங்குனி உத்திர திருவிழா கடந்த 10-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று திருப ்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோவிலில் தேரோட்டம் நடைபெற்றது. அதற்காக சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பெருமாள், பூதேவி, ஸ்ரீதேவியுடன் தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து தேரின் வடம் பிடித்து திவான் பழனிவேல் பாண்டியன் தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். தேரோட்டத்தில் கோவிலின் செயல் அலுவலர் கிரிதரன், கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தீர்த்தவாரி
கோவிலின் அருகே உள்ள நிலையில் இருந்து தொடங்கப் பட்ட தேரை உள்ளூர் மற்றும் வெளியூர்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்து வந்தனர். கோவிலின் நான்கு ரத வீதிகளில் வலம் வந்த தேரானது மீண்டும் நிலைக்கு பகல் 12 மணிக்கு வந்தது. திருவிழாவின் கடைசி நாள் நிகழ்ச்சியாக இன்று பெருமாள் மற்றும் ராமபிரான் சேதுக்கரை கடற்கரையில் தீர்த்தவாரி பூஜைக்கு எழுந்தருளி திருமஞ்சன அபிஷேகமும் நடை பெறுகிறது.

மேலும் செய்திகள்