மாணவ-மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி

மாணவ-மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி

Update: 2022-03-18 13:46 GMT
நெகமம்

கொரோனா பரவலை தடுக்க 12 வயது முதல் 14 வயது வரை உள்ள சிறுவர்-சிறுமிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. அதன்படி பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட நெகமத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் தடுப்பூசி போடும் பணி நடந்தது. 

நெகமம் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி, கொல்லப்பட்டி அரசு பள்ளி ஆகிய இடங்களில் நடந்த முகாமில் மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் வந்து தடுப்பூசி போட்டுக்கொண்டனர். இதில் மொத்தம் 80 மாணவ-மாணவிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்த பணியை நெகமம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் தொடங்கி வைத்தார். இதில் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் செவிலியர்கள் உள்பட மருத்துவ பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்