சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திருக்கல்யாணம்
வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திருக்கல்யாணம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
வால்பாறை
வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திருக்கல்யாணம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
திருக்கல்யாண விழா
வால்பாறையில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இங்கு இன்று பங்குனி உத்திர திருவிழா எளிய முறையில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி முருகப்பெருமானுக்கும், வள்ளி-தெய்வானைக்கும் திருக்கல்யாண விழா நடத்தப்பட்டது. இதில் வால்பாறை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருவிழாவிற்கான ஏற்பாடுகளை முருகன் நற்பணி மன்ற தலைவர் மதனகோபால், முன்னாள் அறங்காவல்குழு தலைவர் வள்ளிக்கண்ணு, நிர்வாகிகள் சீனிவாசன், இருளப்பன், சிங்காரம், கோபால் ஆகியோர் செய்திருந்தனர். இந்த கோவிலில் அடுத்த மாதம்(ஏப்ரல்) கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
சுவாமி வீதி உலா
நெகமத்தை அடுத்த செட்டியக்காபாளையத்தில் உள்ள பால தண்டாயுதபாணி கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா மிக விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டு பங்குனி உத்திர திருவிழா இன்று நடைபெற்றது. இதையொட்டி சுவாமிக்கு மாலை 4 மணிக்கு பல்வேறு சிறப்பு அபிஷேக பூஜை, 6.30 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து மயில் வாகனத்தில் முக்கிய வீதிகள் வழியாக சுவாமி திருவீதி உலா வந்தார். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.