பரமத்திவேலூர் பகுதியில் அரசமரம், வைக்கோல் போர் தீப்பிடித்தது தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர்

பரமத்திவேலூர் பகுதியில் அரசமரம், வைக்கோல் போர் தீப்பிடித்தது தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர்

Update: 2022-03-18 13:27 GMT
பரமத்திவேலூர்:
பரமத்திவேலூர் செங்கப்பள்ளி பகுதியில் உள்ள அரசமரத்திற்கு அருகில் கிடந்த குப்பைகளை ஒன்று சேர்த்து அப்பகுதியை சேர்ந்த சிலர் தீ வைத்துள்ளனர். அப்போது  அரசமரத்தில் எதிர்பாராதவிதமாக திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதை பார்த்த அங்கிருந்தவர்கள் ஓடி வந்து தீயை அணைக்க முயன்றனர். இருப்பினும் தீயை அணைக்க முடியவில்லை. இதுகுறித்து அங்கிருந்தவர்கள் வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் அரசமரத்தில் பற்றி எரிந்த தீயை அணைத்து அருகில் உள்ள பகுதிகளுக்கு தீ பரவாமல் தடுத்தனர். இருப்பினும் அரசமரம் அதிகளவில் தீயில் கருகி நாசமானது.
பாலப்பட்டி பகுதியை சேர்ந்தவர் புக்கராண்டி. விவசாயி. இவர் கால்நடைகளுக்கு போடுவதற்காக வீட்டின் அருகே வைக்கோல் போர் வைத்திருந்தார். இந்த வைக்கோல் போரில் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைக்க முயற்சி செய்தனர். இருப்பினும் தீயை அணைக்க முடியவில்லை. தகவல் அறிந்து அங்கு சென்ற வேலாயுதம்பாளையம் தீயணைப்பு படை வீரர்கள் வைக்கோல் போரில் எரிந்த தீயை அணைத்து தீ மேலும் பரவாமல் தடுத்தனர். இருப்பினும் ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள வைக்கோல் போர் தீயில் எரிந்து நாசமானது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்