மதுவில் விஷம் கலந்து குடித்து கட்டிட மேஸ்திரி தற்கொலை
ஆரணியில் மதுவில் விஷம் கலந்து குடித்து கட்டிட மேஸ்திரி தற்கொலை
ஆரணி
ஆரணி பாரதியார் தெரு அருகில் உள்ள தண்டுமாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 45), கட்டிட மேஸ்திரி.
இவருக்கு சுமதி என்ற மனைவியும், 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். வெங்கடேசனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருப்பதால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில் நேற்று இரவு ஏற்பட்ட குடும்பத்தகராறில் சுமதி தன் குழந்தைகளை அழைத்துக் கொண்டு அருகில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த வெங்கடேசன் வீட்டில் யாரும் இல்லாதபோது மதுவில் விஷம் கலந்து குடித்து மயங்கி கிடந்தார்.
இன்று காலையில் சுமதி வந்து பார்க்கும் போது வெங்கடேசன் மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவரை ஆரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து ஆரணி டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரேசன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.