ஏரல் தேவி நட்டார் கொண்ட அம்மன் கோவில் பங்குனி உத்திர திருவிழா

ஏரல் தேவி நட்டார் கொண்ட அம்மன் கோவில் பங்குனி உத்திர திருவிழா நடந்தது;

Update: 2022-03-18 13:07 GMT
ஏரல்:
ஏரல் தேவி நட்டார் கொண்ட அம்மன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நேற்று விமரிசையாக நடந்தது. விழாவை முன்னிட்டு காலையில் தாமிரபரணி ஆற்றில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். பின்னர் கோவிலில் அம்மனுக்கு பாலாபிஷேகம் நடந்தது.மதியம் அம்மனுக்கு சிறப்பு தீபாராதனையும், சிறப்பு பூஜையும் நடந்தது. மாலையில் தாமிரபரணி ஆற்றில் இருந்து மேளதாளம் முழங்க கோவிலுக்கு தீர்த்தம் கொண்டு வரப்பட்டது. இரவு 1 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி காலை, மதியம், இரவு ஆகிய மூன்று வேளைகளிலும் அன்னதானம் நடந்தது. இன்று(சனிக்கிழமை) மதியம் அம்மனுக்கு சிறப்பு பூஜை, அன்னம் படைத்தல் நிகழ்ச்சி நடக்கிறது. 

மேலும் செய்திகள்