அரசு பள்ளியில் மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாம்
திருவண்ணாமலை அரசு பள்ளியில் மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாம்
திருவண்ணாமலை
திருவண்ணாமலை தியாகி நா.அண்ணாமலைபிள்ளை அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 12 வயது முதல் 14 வயது வரை உள்ள மாணவ, மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடந்தது.
பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயக்குமாரி தலைமை தாங்கினார். பள்ளி பெற்றோர்-ஆசிரியர் கழக தலைவர் ஏ.ஏ.ஆறுமுகம் முன்னிலை வகித்தார்.
டாக்டர் எஸ்.கனிமொழி தலைமையில் செவிலியர் கவுரி உள்ளிட்டோர் பங்ேகற்ற மருத்துவக்குழுவினர் மாணவ-மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி போட்டனர்.
அதில் ஆசிரியர் சங்க செயலாளர் ஜான்வெலிங்டன், உதவி தலைமை ஆசிரியர் சண்முகம், பெற்றோர்-ஆசிரியர் கழக பொருளாளர் வெங்கடேசன், பள்ளி மாணவர் பாதுகாப்பு ஆலோசகர் வேல்முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.