கலவை அருகே குடிபோதையில் வாலிபர் வெட்டிக் கொலை. விவசாயி கைது

கலவை அருகே குடிபோதையில் வாலிபர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக விவசாயி கைது செய்யப்பட்டார்.;

Update: 2022-03-18 11:51 GMT
கலவை
கலவை அருகே குடிபோதையில் வாலிபர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக விவசாயி கைது செய்யப்பட்டார்.

குடிபோதையில் தகராறு

ராணிப்பேட்டை மாவட்டம் கலவையை அடுத்த பொன்னம்பலம் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகன் தினேஷ் (வயது 30). அதே கிராமத்தை சேர்ந்தவர் அருள் (45). இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்கனவே வழித்தகராறு இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் அருள் நிலத்தின் அருகே இருவரும் மது அருந்தி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. 

அப்போது இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் வாய்த்தகராறு சண்டையாக மாறியது. ஒருவரை ஒருவர் திட்டி குடிபோதையில் தினேஷை, அருள் கத்தியால் வெட்டியதாக கூறப்படுகிறது. 

வெட்டிக்கொலை

இதில் படுகாயமடைந்த தினேஷ் அங்கிருந்து உயிர்தப்பிக்க  ஓடி உள்ளார். இதைப் பார்த்த ஊர் பொதுமக்கள் வாழைப்பந்தல் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் தினேஷை செய்யாறு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு தினேஷை டாக்டர்கள் பரிசோதித்து பார்த்ததில் அவர் வரும் வழியிலேயே இருநதது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து தினேஷ் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 
இதுகுறித்து கலவை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி வழக்குப்பதிவு செய்து அருளை கைது செய்தார். கொலை செய்யப்பட்ட தினேசுக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளான்.

மேலும் செய்திகள்