சுங்குவார்சத்திரம் அருகே லாரி- மோட்டார் சைக்கிள் மோதல்; உணவு பொருள் பாதுகாப்பு துறை ஆய்வாளர் பலி
சுங்குவார்சத்திரம் அருகே லாரி- மோட்டார் சைக்கிள் மோதி உணவு பொருள் பாதுகாப்பு துறை ஆய்வாளர் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.
திருவள்ளூர் மாவட்டம் தக்கோலம் சக்தி விநாயகர் கோவில் தெருவில் வசித்து வந்தவர் ஜெயவேல் (வயது 39). இவர் திருவள்ளூர் மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு துறை ஆய்வாளராக வேலை செய்து வந்தார். இநத நிலையில் நேற்று ஜெயவேல் தனது மோட்டார் சைக்கிளில் வேலையை முடித்து விட்டு தக்கோலம்-பேரம்பாக்கம் சாலையில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் நின்று இருந்த லாரியின் பின் பக்கம் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் ஜெயவேல் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த சுங்குவார் சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பரந்தாமன் மற்றும் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.