500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் பெண் கைது
பள்ளம் பகுதியில் 500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்து பெண்ைண கைது செய்தனர்.
நாகர்கோவில:
பள்ளம் பகுதியில் 500 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார் பெண்ணை கைது செய்தனர்.
குமரி மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜி தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் இரவு பள்ளம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் அண்ணாநகர் பகுதியை சேர்ந்த இருதயராஜ் மனைவி ஜான் மேரி (வயது 42) என்பவர் வீட்டில் சோதனை நடத்தினர். வீட்டின் பின்பகுதியில் சிறு, சிறு மூடைகளில் மொத்தம் 500 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த அரிசி கேரளாவுக்கு கடத்தி செல்ல முயன்றது தெரியவந்தது. இதனைதொடர்ந்து ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்து, ஜான்மேரியை கைது செய்தனர்.
---