பா.ஜனதா தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பலி

ஆத்தூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் பா.ஜனதா தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பலியனாார்.

Update: 2022-03-17 21:18 GMT
ஆத்தூர்:-
வாழப்பாடி செல்லியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் ஜெயகிருஷ்ணன் (வயது 34). இவர் சேலம் மாவட்ட பா.ஜனதா தொழில்நுட்ப பிரிவு செயலாளராக பதவி வகித்து வந்தார். நேற்று முன்தினம் ஜெயகிருஷ்ணன் தனது மோட்டார் சைக்கிளில் ஆத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரில் ஆத்தூர் அருகே உள்ள செல்லியம்பாளையம் மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த ராமர் மகன் செல்வகுமார் (22) மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். செல்லியம்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. 
இதில் ஜெயகிருஷ்ணன், செல்வகுமார் படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்கள் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே ஜெயகிருஷ்ணன் பரிதாபமாக இறந்தார். செல்வகுமார் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து ஆத்தூர் ஊரக போலீஸ் இன்ஸ்பெக்டர்  ரஜினிகாந்த் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்