தனியார் கல்லூரியில் மயங்கி விழுந்த மாணவி சாவு
தலைவாசல் அருகே தனியார் கல்லூரியில் மயங்கி விழுந்த மாணவி பரிதாபமாக இறந்தார்.
தலைவாசல்:-
ஆத்தூரை அடுத்த கீரிப்பட்டியை சேர்ந்தவர் பழனிசாமி. இவருக்கு கீர்த்தனா (வயது 18) என்ற மகளும், 2 மகன்களும் இருந்தனர். கீர்த்தனா தலைவாசல் அருகே தனியார் கல்லூரி ஒன்றில் பி.காம். முதலாமாண்டு படித்து வந்தார். இவருக்கு உடல் நிலை சரியில்லாததால் மாத்திரை சாப்பிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று கல்லூரிக்கு சென்ற கீர்த்தனா அங்கு திடீரென மயங்கி விழுந்தார். கல்லூரி அலுவலர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக தலைவாசலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே மாணவி கீர்த்தனா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் தலைவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.