கஞ்சா விற்ற 3 பேர் கைது

கஞ்சா விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்

Update: 2022-03-17 21:15 GMT
மணப்பாறை
மணப்பாறை பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கஞ்சா விற்ற மோர்குளம் பகுதியைச் சேர்ந்த நாகஜோதி(வயது 27), திண்டுக்கல் மாவட்டம் நடுகண்டனூர் பகுதியை சேர்ந்த முருகன்(43) ஆகியோரை போலீசார் கைது செய்து, 150 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதேபோல, திருவெறும்பூர் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது காவேரி நகரைச் சார்ந்த ஆனந்தராஜ் (35) என்பவர் கஞ்சா விற்றபோது கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 320 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்