லாரி டிரைவரை தாக்கி தங்க சங்கிலி பறிப்பு ஒருவர் கைது
சுசீந்திரம் அருகே லாரி டிரைவரை தாக்கி தங்க சங்கிலி பறித்த வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டார். மேலும் 5 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
மேலகிருஷ்ணன்புதூர்
சுசீந்திரம் அருகே லாரி டிரைவரை தாக்கி தங்க சங்கிலி பறித்த வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டார். மேலும் 5 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
லாரி டிரைவர்
ஆரல்வாய்மொழி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் விஷ்ணு (வயது 24), லாரி டிரைவர். சம்பவத்தன்று இவர் மோட்டார் சைக்கிளில் சுசீந்திரம் அருகே நல்லூரை அடுத்த மறுகால்தலையில் உள்ள புலமாடன் கோவில் அருகில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது நாகர்கோவில் ஒழுகினசேரி அவ்வைசண்முகம் சாலையை சேர்ந்த வினோத்குமார் என்ற செல்வம் (வயது 27) மற்றும் அய்யாகுட்டி, முருகன், விஜய், மாரியப்பன், லெட்சுமணன் ஆகிய 6 பேர் சேர்ந்து விஷ்ணுவை வழிமறித்து மோட்டார் சைக்கிளை தடுத்து நிறுத்தி அரிவாளால் வெட்டி தாக்கினர்.
தொடர்ந்து அவர் கழுத்தில் அணிந்திருந்த 1½ பவுன் தங்க சங்கிலி, விலை உயர்ந்த செல்போன், கையில் அணிந்திருந்த கைகெடிகாரம், பாக்கெட்டில் வைத்திருந்த பர்ஸ் ஆகியவற்றை பறித்து விட்டு தப்பி சென்றனர்.
கைது
இதில் படுகாயமடைந்த விஷ்ணுவை அக்கம் பக்கத்தினர் மீட்டு நாகர்கோவில் அருகே உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து விஷ்ணு அளித்த புகாரின் பேரில் சுசீந்திரம் இன்ஸ்பெக்டர் சாயிலெட்சுமி, சப் இன்ஸ்பெக்டர், ஆஷாஜெபகர் ஆகியோர் 6 பேர் கொண்ட கும்பல் மீது வழக்கு பதிவு செய்தனர். இதில் அந்த கும்பலை சேர்ந்த வினோத்குமார் என்ற செல்வத்தை கைது செய்தனர். மேலும் 5 பேரை சுசீந்திரம் போலீசார் தேடி வருகிறார்கள்.