கடம்பூர் மல்லியம்மன் துர்க்கம் மலைப்பகுதியில் 2 இடங்களில் தீ விபத்து
கடம்பூர் மல்லியம்மன் துர்க்கம் மலைப்பகுதியில் 2 இடங்களில் தீ விபத்து ஏற்பட்டது.
டி.என்.பாளையம்
டி.என்.பாளையம் வனச்சரகத்துக்கு உள்பட்ட கடம்பூர் அருகே மல்லியம்மன் துர்க்கம் என்ற மலைப்பகுதி உள்ளது. இதன் உச்சியில் 2 இடங்களில் உள்ள மரம், செடி, கொடிகள் நேற்று இரவு திடீரென தீப்பிடித்து எரிந்தது. மளமள வென பரவிய தீ கொழுந்துவிட்டு எரிந்தது.இதுகுறித்து கடம்பூர் போலீசார், டி.என்.பாளையம் வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.