ஸ்ரீரங்கம்
திருவானைக்காவல் பெரியார் நகரை சேர்ந்தவர் ரமேஷ்குமார். இவர் கோயம்புத்தூரில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி குருபிரியா(வயது 28). இவர்களுக்கு திருமணமாகி ஒரு ஆண்டுதான் ஆகிறது. குழந்தை இல்லை. குருபிரியா திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எச்.டி. படித்து வந்தார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் குருபிரியா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை ஸ்ரீரங்கம் போலீசார் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். குருபிரியாவிற்கு திருமணமாகி ஒரு ஆண்டே ஆவதால் ஆர்.டி.ஓ.மேல் விசாரணை நடத்த உள்ளார்.