சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய கொடூர தாய் கைது

திருப்பரங்குன்றம் அருகே சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய தாய் உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர்;

Update: 2022-03-17 20:41 GMT
திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றம் அருகே சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய தாய் உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர்
வீட்டில் விபசாரம்
மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள ஹார்விப்பட்டி எஸ்.ஆர்.வி. நகர் பகுதியில் ஒரு வீட்டில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதனையடுத்து மதுரை மாநகர உதவி கமிஷனர் அக்பர்கான் தலைமையில் திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹேமமாலா, ஆள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிளவர் ஷீலா ஆகியோர் கொண்ட தனிப்படை போலீசார் அந்த வீட்டில் அதிரடியாக புகுந்தனர்.
சிறுமி மீட்பு
அப்போது அங்கு 16 வயது சிறுமி மற்றும் 5 பெண்கள் இருந்தனர். இதில் சிறுமியை மீட்டு விசாரணை நடத்தியதில் அதிர்ச்சி தகவல் வெளியானது. அதாவது பெற்ற தாயே சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது தெரியவந்தது. அதைக் கேட்டு போலீசாரே அதிர்ந்து போனார்கள். பாலியல் தொழிலுக்கு ஆட்டோ டிரைவர்கள் சிலர் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது. 
இதுகுறித்து அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கிருஷ்ணமூர்த்தி(வயது 44), அசோக் ராஜ்(31) மற்றும் அந்த சிறுமியின் தாய் உள்ளிட்ட 5 பெண்களை கைது செய்தனர். அதே போல் மேலும் சிலரையும் சேர்த்து மொத்தம் 11 பேரை இந்த வழக்கில் கைது செய்துள்ளனர். மேலும் யாருக்கேனும் தொடர்பு உள்ளதா எனவும் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்