உசிலம்பட்டி
மதுரை மாவட்டம் சேடபட்டி அருகே உள்ள சின்னக்கட்டளையைச் சேர்ந்தவர் வேம்படியான்(வயது56). விவசாயி. இதே ஊரைச்சேர்ந்தவர் தங்கம். இவர்கள் 2 குடும்பத்துக்கும் இடையை தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று இரவு இந்த இரு குடும்பத்தினரிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது தங்கம், அவரது மகன்கள் முனி, பிரபு, ஈஸ்வரன், கண்ணன் மற்றும் அவரது மனைவி, மருமகள் உள்பட 7 பேர் சேர்ந்து கத்தி மற்றும் அரிவாளால் வேம்படியான் மற்றும் அவர்களின் குடும்பத்தினரை தாக்கினர். இதில் படுகாயமடைந்த வேம்படியான் சம்பவ இடத்திலேயே இறந்தார். மேலும் வேம்படியானின் மனைவி ராணியம்மாள்(53 ), மகள் பாண்டியம்மாள்(32) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்த இருவரையும் சேடபட்டி போலீசார் சிகிச்சைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த வேம்படியான் உடலை மீட்டு சேடபட்டி போலீசார் பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து கொலை சம்பவத்தில் தொடர்புடைய நபர்களை தேடி வருகின்றனர்.