422 பேருக்கு கொரோனா பரிசோதனை
422 பேருக்கு கொரோனா பரிசோதனை முடிவு வரவேண்டியுள்ளது.
அரியலூர்:
அரியலூர் தொடர்ந்து 10-வது நாளாக கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக திகழ்வது குறிப்பிடத்தக்கது. மேலும் அரியலூர் மாவட்டத்தில் 422 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது. நேற்று மாவட்டத்தில் மொத்தம் 3,091 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.