விபத்தில் விவசாயி பலி

விபத்தில் விவசாயி உயிரிழந்தார்.

Update: 2022-03-17 20:30 GMT
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கல்லாத்தூர் மெயின்ரோடு தெருவை சேர்ந்தவர் ஞானபிரகாசம்(வயது 37). விவசாயியான இவர் நேற்று முன்தினம் இரவு ஆண்டிமடத்தில் இருந்து தனது வீட்டிற்கு வருவதற்காக கல்லாத்தூர் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். கல்லாத்தூர் மெயின்ரோட்டில் வந்தபோது முன்னால் சாலையோரமாக நடந்து சென்ற அதே பகுதியை சேர்ந்த ராஜகோபாலன் மகன் ராஜபிரகாஷ்(20), ஆண்டிமடம் விளந்தை செல்லத்தெருவைச் சேர்ந்த விஷால்(18) ஆகியோர் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் ஞானப்பிரகாசம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த விஷாலும், லேசான காயமடைந்த ராஜபிரகாசும் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குப்பதிந்து ஞானப்பிரகாசத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்