தி.மு.க. கொடியேற்று விழா

கடையம் ஒன்றியத்தில் தி.மு.க. கொடியேற்று விழா நடந்தது.

Update: 2022-03-17 19:58 GMT
கடையம்:
தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழாவையொட்டி, கடையம் தெற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில், கடையம் பாரதிநகர், லாலா முக்கு உள்ளிட்ட 69 இடங்களில் கட்சி கொடியேற்றப்பட்டது. தெற்கு ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் கட்சி கொடியேற்றி அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்.
மாவட்ட மகளிரணி முத்துச்செல்வி, வடக்கு ஒன்றிய செயலாளர் மகேஷ் மாயவன், மேற்கு சீனித்துரை, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ்செல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்