“அனைத்து வார்டுகளிலும் பாரபட்சமின்றி பணிகள் மேற்கொள்ளப்படும்”-தேவகோட்டை நகராட்சி கூட்டத்தில் தலைவர் பேச்சு
அனைத்து வார்டுகளிலும் பாரபட்சமின்றி பணிகள் மேற்கொள்ளப்படும் என்று தேவகோட்டை நகராட்சி கூட்டத்தில் தலைவர் கூறினார்.
காரைக்குடி.
அனைத்து வார்டுகளிலும் பாரபட்சமின்றி பணிகள் மேற்கொள்ளப்படும் என்று தேவகோட்டை நகராட்சி கூட்டத்தில் தலைவர் கூறினார்.
நகர்மன்ற கூட்டம்
தேவகோட்டை நகராட்சியில் முதல் நகர்மன்ற கூட்டம் நகர்மன்ற தலைவர் சுந்தரலிங்கம் தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் ரமேஷ் முன்னிலை வகித்தார்.ஆணையாளர் அசோக்குமார் மற்றும் பொறியாளர் மதுசூதனன் வரவேற்று பேசினார்.. கூட்டத்தில் நகராட்சி அலுவலக அதிகாரிகள், கவுன்சிலர்கள் கலந்துகொண்டனர். அதன் பின்னர் தீர்மானங்கள் வாசிக்கப்பட்டது. கூட்டத்தில் தி.மு.க கவுன்சிலர் பாலமுருகன் கூறும்போது-
தேவகோட்டை 6-வது வார்டு நகராட்சி மேல்நிலைப்பள்ளி எனது வார்டில் உள்ளது. கடந்த 22 ஆண்டுகளாக கிராமக் கல்விக்குழு தலைவராக உள்ளேன். இதற்கு முன்பு ஓட்டுக்கொட்டகையாகவும், மாட்டுக்கொட்டகையாக இருந்ததை கடந்த ஆட்சிக் காலத்தில் 3 கான்கிரீட் கட்டிடங்களாக கொண்டுவந்தேன். தற்போது 131 மாணவர்கள் படிக்கின்றனர்.. தேவகோட்டையில் அனைத்து வார்டுகளிலும் நகராட்சி பணியாளர்கள் சென்றால் கவுன்சிலருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். கவுன்சிலர்களை புறக்கணித்து எவ்வித பணிகள் மேற்கொள்ளக்கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
அனைத்து வார்டுகளிலும்...
அதனைத்தொடர்ந்து ஒவ்வொரு கவுன்சிலர்களும் தங்கள் வார்டு குறைகளை எடுத்துக்கூறினர். இதற்கு நகர்மன்ற தலைவர் சுந்தரலிங்கம் கூறியதாவது- தேவகோட்டையில் உள்ள அனைத்து வார்டுகளிலும் எவ்வித பாரபட்சமும் இன்றி அனைத்து அடிப்படை பணிகளும் மேற்கொள்ளப்படும். அனைத்து வார்டுகளிலும் குறைகள் இருந்தால் கவுன்சிலர்கள் என்னிடம் எப்போது வேண்டுமானாலும் கூறலாம். .இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து நகர்மன்ற துணைத்தலைவர் ரமேஷ் கூறும்போது தேவகோட்டை ஒத்தக்கடையில் இருந்து பஸ் நிலையம் வரை மழைநீர் வடிகால் இல்லாததால் சாலைகளில் தண்ணீர் தேங்கி சாலைகள் பழுதாகி வருகிறது. எனவே உடனடியாக மழைநீர் வடிகால் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.