பட்டதாரி பெண் தூக்குப்போட்டு தற்கொலை

செங்கோட்டை அருகே பட்டதாரி பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-03-17 19:39 GMT
செங்கோட்டை:
செங்கோட்டை அருகே உள்ள தவணை கிராமம் அம்பேத்கர் காலனியை சேர்ந்தவர் வைரவன். கூலித்தொழிலாளி. இவருடைய மகள் முத்துபிரியா (வயது 22). இவர் பி.காம். படித்து உள்ளார். இவருக்கு பெற்றோர் திருமண ஏற்பாடு செய்து இருந்தனர். 
இந்த நிலையில் நேற்று முன்தினம் முத்துபிரியா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்ததும், செங்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரசையன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். முத்துபிரியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஸ்டீபன் ஜோஸ் விசாரணை நடத்தினார். விசாரணையில், முத்துபிரியாவுக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என்றும், இதை வெளியே சொன்னால் பெற்றோர் சத்தம் போடுவார்கள் என்றும் பயந்து வாழ்க்கையில் வெறுப்படைந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்