தள்ளுவண்டியில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட கலப்பட கருப்பட்டி பறிமுதல்
பாளையங்கோட்டையில் தள்ளுவண்டியில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட கலப்பட கருப்பட்ட்டி பறிமுதல் செய்யப்பட்டது.
நெல்லை:
பாளையங்கோட்டை உணவு பாதுகாப்பு அலுவலர் சங்கரலிங்கம் தலைமையிலான அதிகாரிகள் நேற்று திருச்செந்தூர் ரோட்டில் வியாபாரி ஒருவர் தள்ளுவண்டியில் விற்பனை செய்து கொண்டிருந்த கருப்பட்டி பற்றி விசாரித்தனர். அதற்கு அவர், தான் சீனியில் செய்த கருப்பட்டி மற்றும் சில்லு கருப்பட்டி விற்பனை செய்ய 25 கிலோ கொண்டு வந்ததாகவும், விற்பனை செய்தது போக 15¾ கிலோ மீதம் இருப்பதாகவும் கூறினார். ஆனால் அவரிடம் உணவுப்பொருள் விற்பனைக்கான உணவு பாதுகாப்பு உரிமம், பதிவு சான்று எதுவும் இல்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து 10 கிலோ 150 கிராம் கலப்பட கருப்பட்டி, 5 கிலோ 600 கிராம் சில்லு கருப்பட்டி ஆகியவற்றை பறிமுதல் செய்து மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் சசிதீபாவிடம் ஒப்படைத்தார்.