நீரேற்று நிலையங்களில் மேயர் ஆய்வு

கொண்டாநகரம், சுத்தமல்லி நீரேற்று நிலையங்களில் மாநகராட்சி மேயர் பி.எம்.சரவணன் நேற்று ஆய்வு செய்தார்.;

Update:2022-03-18 00:58 IST
பேட்டை:
கொண்டாநகரம், சுத்தமல்லி நீரேற்று நிலையங்களில் மாநகராட்சி மேயர் பி.எம்.சரவணன் ஆய்வு செய்தார். 

மாநகராட்சி மேயர் ஆய்வு
நெல்லையை அடுத்த பேட்டை பகுதியில் கடந்த சில நாட்களாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதையடுத்து நெல்லை மாநகராட்சி மேயர் பி.எம்.சரவணன், மாநகராட்சி பொறியாளர் நாராயணன், உதவி ஆணையாளர்கள் அய்யப்பன், லெனின் மற்றும் அதிகாரிகள் நேற்று கொண்டாநகரம், சுத்தமல்லி நீரேற்று நிலையங்களில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது கொண்டாநகரம் நீரேற்று நிலையத்தில் உள்ள குழாயில் சகதி அடைத்து இருந்ததால், அதை அப்புறப்படுத்தி குடிநீர் சீராக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

நடவடிக்கை 
இதுகுறித்து மாநகராட்சி மேயர் பி.எம்.சரவணன் கூறியதாவது:-
கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் சரியான முறையில் நீரேற்று நிலையத்தில் பராமரிப்பு பணி மேற்கொள்ளாததால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தற்போது எனது தலைமையில் அதிகாரிகள் நேரடியாக வந்து ஆய்வு செய்து, நீரேற்று நிலையத்தில் உள்ள சகதி மற்றும் மணலை அப்புறப்படுத்தி குடிநீர் சீராக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 
அரியநாயகிபுரம் கூட்டு குடிநீர் திட்டம் மூலமாக நெல்லை மாநகராட்சி முழுவதும் குடிநீர் சீராக வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன்மூலம் நெல்லையில் அனைத்து பகுதியிலும் தட்டுப்பாடு இன்றி குடிநீர் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். 
இந்த ஆய்வின்போது, பேட்டை பகுதி கவுன்சிலர்கள் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர். 

மேலும் செய்திகள்