கொரோனாவுக்கு முதியவர் பலி
கடலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு முதியவர் ஒருவர் பலியானார்.;
கடலூர்,
கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை கொரோனா தொற்றால் 74 ஆயிரத்து 240 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இதில் 895 பேர் பலியான நிலையில், 73 ஆயிரத்து 335 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். நேற்று வெளியான பரிசோதனை முடிவில் புதிதாக ஒருவர் கூட கொரோனாவால் பாதிக்கப்படவில்லை.
இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த பரங்கிப்பேட்டையை சேர்ந்த 78 வயது முதியவர் சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் நேற்று ஒருவர் மட்டும் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளார். தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்ட 9 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.