5 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
நெல்லையில் 5 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.;
நெல்லை:
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பகுதியை சேர்ந்தவர்கள் அன்பு கணேஷ் (வயது 38), விக்னேஸ்வரன் (29), நாங்குநேரி பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன் (41), நெல்லை சந்திப்பு உடையார்பட்டியை சேர்ந்தவர் நம்பிராஜன் (27). இவர்கள் 4 பேரும் கொலை முயற்சி வழக்குகளில் பாளையங்கோட்டை போலீசாரால் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல் திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் தாளபத்தி புதுவலசை பகுதியை சேர்ந்தவர் இம்ரான் (33). இவர் திருட்டு வழக்கில் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் அன்பு கணேஷ் உள்ளிட்ட 5 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிடும்படி, நெல்லை மாநகர போலீஸ் துணை கமிஷனர் டி.பி.சுரேஷ்குமார், பாளையங்கோட்டை உதவி போலீஸ் கமிஷனர் பாலச்சந்திரன் ஆகியோர், போலீஸ் கமிஷனர் துரைக்குமாருக்கு பரிந்துரைத்தனர்.
போலீஸ் கமிஷனர் அதனை ஏற்று அன்பு கணேஷ் உள்ளிட்ட 5 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். இதனையடுத்து 5 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கான உத்தரவு நகலை அந்தந்த போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்கள் திருப்பதி (பாளையங்கோட்டை), ஞானராஜ் (ஐகிரவுண்டு) ஆகியோர் நேற்று பாளையங்கோட்டை சிறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.