தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

மன்னார்குடி பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2022-03-17 19:04 GMT
மன்னார்குடி:
மன்னார்குடி நகராட்சியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யப்படுகின்றதா?, பயன்படுத்தப்படுகிறதா? என  சுகாதாரத்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். அதன்படி மன்னார்குடி பஸ்நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கடைகள் மற்றும் ஓட்டல்களில் நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் வெங்கடாசலம், சுவாமிநாதன், மேற்பார்வையார்கள் அந்தோணி, கலைச்செல்வம், சாமி, சேகர் ஆகியோர் அடங்கிய சுகாதார குழுவினர் சோதனை செய்தனர். இதில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட ரூ.25 ஆயிரம் மதிப்பிலான பிளாஸ்டி பொருட்களை பறிமுதல் செய்தனர். 
.மேலும் பிளாஸ்டிக் பொருட்களை வைத்திருந்த ஓட்டல்கள், கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் அளிக்கப்பட்டது. தடையை மீறி பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்தாலோ, பயன்படுத்தினாேலா நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். 

மேலும் செய்திகள்