விபத்தில் காயம் அடைந்த பெண் சாவு
பாளையங்கோட்டை அருகே விபத்தில் காயம் அடைந்த பெண் இறந்தார்.;
நெல்லை:
பாளையங்கோட்டை அருகே உள்ள ரெட்டியார்பட்டி மகிழ்ச்சி நகர் பகுதியை சேர்ந்தவர் வேலு மனைவி சுமித்ரா (வயது 57). இவர் சம்பவத்தன்று தனது மகன் அஸ்மித்துடன் மோட்டார் சைக்கிளில் புதிய பஸ் நிலையத்தில் இருந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அரசு என்ஜினீயரிங் கல்லூரி அருகே சென்றபோது அந்த பகுதியில் வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக சுமித்ரா சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த சுமித்ராவை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார்.
இந்த விபத்தில் அஸ்மித் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இது குறித்து மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.