பா.ஜனதாவினர் திடீர் சாலை மறியல்

அம்பையில் பா.ஜனதா கட்சியினர் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.;

Update: 2022-03-17 18:54 GMT
அம்பை:
விக்கிரமசிங்கபுரத்தைச் சேர்ந்த ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி ஒருவர் போக்சோ சட்டத்தில் விக்கிரமசிங்கபுரம் போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளார். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த கால தாமதம் செய்வதாக கூறியும், உடனே ஆஜர்படுத்த வலியுறுத்தியும் பா.ஜனதா மற்றும் இந்து அமைப்பினர் அம்பை ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகம் முன்பு நேற்று திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பா.ஜனதா மாவட்ட பொறுப்பாளர் கட்டளை ஜோதி, முன்னாள் மாவட்ட தலைவர் மகாராஜன், மாவட்ட துணைத்தலைவர் லட்சுமணராஜா, நிர்வாகிகள் சேகர் பண்டியன், பால் பாண்டியன், ராமச்சந்திரன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து ெகாண்டனர். 
அவர்களிடம் துணை ேபாலீஸ் சூப்பிரண்டு பிரான்சிஸ், இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், கைதானவரை உடனடியாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி உள்ளோம் என்று கூறினர். இதையடுத்து அவர்கள் போராட்டத்ைத கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்