வீட்டுக்குள் புகுந்த மரநாய் கூண்டில் பிடித்து வனத்துறையிடம் ஒப்படைப்பு
திருவட்டார் அருகே வீட்டுக்குள் புகுந்த மரநாய் கூண்டு வைத்து பிடித்து வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.
திருவட்டார்,
திருவட்டார் அருகே வீட்டுக்குள் புகுந்த மரநாய் கூண்டு வைத்து பிடித்து வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.
மரநாய்
திருவட்டார் தோட்டவாரம் அருகே வசிப்பவர் அலிசன் வேதராஜ். இவர் வீட்டின் அருகே அலங்கார மீன் வளர்ப்பு நிலையம் நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று காலை வீட்டின் பின்புறம் உள்ள பழைய அறை ஒன்றில் பொருட்களை எடுக்கச் சென்ற போது அங்கு மரநாய் இருந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அலிசன் வேதராஜ், அந்த மரநாயை லாவகமாக இரும்பு கூண்டில் அடைத்தார்.
வனத்துறையிடம் ஒப்படைப்பு
இதுபற்றி குலசேகரம் சரக வன அலுவலர் விஜயகுமாருக்கு தகவல் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து பிற்பகல் 3 மணி அளவில் குலசேகரம் தீத்தடுப்பு காவலர் ராஜேஷ், வனக்காப்பாளர் விஜயன் ஆகியோர் வந்தனர். அவர்களிடம் மர நாய் ஒப்படைக்கப்பட்டது.
மரநாய் எப்படியோ காட்டில் இருந்து தப்பி வந்துள்ளது என்று கூறிய வனத்துறையினர், அதை கொண்டு சென்று பேச்சிப்பாறை அருகே உள்ள சேனங்கோடு வனப்பகுதியில் விட்டனர்.