மயிலாடுதுறையில் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசை கண்டித்து மயிலாடுதுறையில் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை:
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசை கண்டித்து மயிலாடுதுறையில் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக மாநில அரசை கண்டித்தும், அதற்கு மறைமுக ஆதரவு தரும் மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்தும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சிம்சன் தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவர் டி.ரவீந்திரன், மாவட்ட செயலாளர் துரைராஜ், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ஸ்டாலின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் சீனிவாசன், டெல்டா பாசனதாரர்கள் சங்க பொதுச் செயலாளர் டெல்டா அன்பழகன், இயற்கை விவசாயி ராமலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
கோஷங்கள் எழுப்பினர்
ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்தின் உரிமைகளை பறிக்கும் வகையில் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசை கண்டித்தும், அதற்கு மறைமுகமாக ஆதரவளித்து வரும் மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் முருகன், மாவட்ட குழு உறுப்பினர்கள் மேகநாதன், கணேசன், ஒன்றிய செயலாளர் டி.ஜி.ரவிச்சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.