மாணவ-மாணவிகள் உள்பட 4 பேர் காயம்

திருவாரூர் அருகே மரத்தில் பள்ளி வேன் மோதி மாணவ-மாணவிகள் உள்பட 4 பேர் காயம் அடைந்தனர்.

Update: 2022-03-17 18:46 GMT
திருவாரூர்:
திருவாரூர் நகரில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் பள்ளியில் நேற்று மாலை வகுப்புகள் முடிந்து மாணவ-மாணவிகளை ஏற்றி கொண்டு பள்ளி வேன் அடியக்கமங்கலம் பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்தது.  இந்த வேனை குளிக்கரையை சேர்ந்த முருகானந்தம் (வயது57) என்பவர் ஓட்டி சென்றார். கிடாரங்கொண்டான் அருகே சென்ற போது எதிர்பாராதவிதமாக அந்த வேன் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த மரத்தில் மோதியது. இதில் அந்த வேனில் சென்ற ஜெசியா (வயது9), ஹரிஸ்ரீ (9) ரபிக் ஆகிய மாணவ- மாணவிகளும், டிரைவர் முருகானந்தமும் காயம் அடைந்தனர். இவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்சில் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று மாணவர்கள் வீடு திருப்பினர். டிரைவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து திருவாரூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்