3,197 ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டன

பிச்சாவரம் பொரிப்பகத்தில் இருந்து 3,197 ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டன.

Update: 2022-03-17 18:45 GMT
பரங்கிப்பேட்டை, 

கிள்ளை பிச்சாவரம் கடற்கரையில் ஆண்டுதோறும் ஆமை முட்டைகளை வனத்துறையினர் சேகரித்து அங்குள்ள பொரிப்பகத்தில் பாதுகாப்பாக வைக்கப்படும். பின்னர் அங்கு குஞ்சி பொரித்ததும் அவைகளை கடலில் கொண்டு விடுவது வழக்கம். அதன்படி இந்தாண்டும் ஆமை முட்டைகளை வனத்துறையினர் சேகரித்து பொரிப்பகத்தில் பாதுகாப்பாக வைத்தனர். அங்கு முட்டைகளில் இருந்து 3197 ஆமை குஞ்சுகள்  வெளிவந்தது. இந்த ஆமை குஞ்சுகளை அண்ணாமலைப்பல்கலைக்கழக உயிரின ஆராய்ச்சித்துறை முதல்வர் அனந்தராமன், வனத்துறை நிபுணர் கதிரேசன், உயிரின ஆராய்ச்சி மைய மாணவ-மாணவிகள்,  வனத்துறை அலுவலர் அருள்தாஸ், வனக்காப்பாளர் ராஜேஷ்குமார், வனக்காவலர்கள் எழிலரசன், செல்வராஜ் ஆகியோர் பாதுகாப்பாக பிச்சாவரம் கடற்கரையில் விட்டனர்.

மேலும் செய்திகள்