கொரோனா தடுப்பூசி முகாம்

மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி முகாம் செலுத்தப்பட்டது.

Update: 2022-03-17 18:38 GMT
ராஜபாளையம். 
ராஜபாளையம் நகராட்சி சார்பில் ஏ.கே.டி. தர்மராஜா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12 முதல் 14 வயதுக்குட்பட்ட மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமில் நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாம் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் புவனா வரவேற்றார். இதில் பள்ளி முன்னாள் தாளாளர் ஷியாம், நகராட்சி நகர்நல அலுவலர் சரோஜா, மருத்துவர் ஜனனி மற்றும் செவிலியர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளர் காளி மற்றும் தூய்மை இந்தியா திட்ட பணியாளர்கள் செய்திருந்தனர். இந்த முகாமில் 800-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

மேலும் செய்திகள்