அன்னவாசல் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம்

ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது.

Update: 2022-03-17 18:37 GMT
அன்னவாசல்:
அன்னவாசல் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கத்தில் ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் ராமசாமி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் கல்யாணிமாரிமுத்து முன்னிலை வகித்தார். கூட்டத்தில் அலுவலக மேலாளர் கணேசன், ஒன்றியக்குழு கூட்டத்தின் மன்ற பொருட்களை வாசித்தார். பின்னர் கவுன்சிலர்கள் குறுக்கிட்டு மன்ற பொருட்கள் குறித்தும் செயல்படுத்தப்பட வேண்டிய கோரிக்கைகள் குறித்து கேள்வி எழுப்பினர். பின்னர் உறுப்பினர்கள் கேட்ட கேள்விகளுக்கு ஒன்றியக்குழு தலைவர் ராமசாமி மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் வேலு உள்ளிட்டோர் பதில் அளித்தனர். பின்னர் பல்வேறு தீர்மானங்களுக்கு அவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. கூட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள், பொதுப்பணித்துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்