50 கிராமங்களில் மின்சாரம் நிறுத்தம்

50 கிராமங்களில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

Update: 2022-03-17 18:34 GMT
சிவகாசி, 
பராமரிப்பு பணிகள் காரணமாக 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. 
இதுகுறித்து மின்வாரிய அதிகாரி பாவநாசம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பராமரிப்பு பணி 
சிவகாசி கோட்டத்தில் உள்ள வெம்பக்கோட்டை, செவல்பட்டி, ந.சுப்பையாபுரம், சாத்தூர், கங்கரக்கோட்டை ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே, நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த துணை மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் பெறும் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. 
அதன்படி வெம்பக்கோட்டை, சூரார்பட்டி, கோட்டிடையப்பட்டி, சல்வார்பட்டி, கே.மடத்துப்பட்டி, தாயில்பட்டி, விஜயகரிசல்குளம், பானையடிப்பட்டி, சங்கரபாண்டியபுரம், செவல்பட்டி, அப்பையாநாயக்கன்பட்டி, மூர்த்திநாயக்கன்பட்டி, குகன்பாறை, இனாம்மீனாட்சிபுரம், சக்கம்மாள்புரம், அம்மையார் பட்டி, துலுக்கன்குறிச்சி, ந.சுப்பையாபுரம், நள்ளி, உப்பத்தூர், கரிசல்பட்டி, தொட்டிலோவார்பட்டி, பெத்துரெட்டியாபட்டி, கரிசல்பட்டி, இ.ரெட்டியாபட்டி ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது. 
மின்சாரம் நிறுத்தம் 
அதே போல சாத்தூர், மேட்டமலை, படந்தால், வெங்கடாசலபுரம், ஒத்தையால், சடையம்பட்டி, ஓ.மேட்டுப்பட்டி, அமீர்பாளையம், பெரியகொல்லபட்டி, சின்னகொல்லபட்டி, கிருஷ்ணாபுரம், கீழசெல்லையாபுரம், கோவில்செல்லையாபுரம், சாணாகுளம், ஊத்துப்பட்டி, ரெட்டியாபட்டி, ஏழாயிரம்பண்ணை, வெள்ளையாபுரம், பனையடிப்பட்டி, புல்லக்கவுண்டன்பட்டி, எலுமிச்சங்காய்பட்டி, அன்பின்நகரம், மரக்நாதபுரம், தூங்கரெட்டிய பட்டி, நாரணாபுரம், பந்துவார்பட்டி, புதுசூரங்குடி, கம்மாசூரங் குடி, மேலப்புதூர்  உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. 
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்