திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் யாகசாலை அமைக்கும் பணி தீவிரம்

குடமுழுக்கை முன்னிட்டு திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் யாகசாலை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனை தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் நேரில் சென்று பார்வையி்ட்டார்.

Update: 2022-03-17 18:30 GMT
திருக்கடையூர்:
குடமுழுக்கை முன்னிட்டு திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் யாகசாலை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனை தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் நேரில் சென்று பார்வையி்ட்டார்.
அமிர்தகடேஸ்வரர் கோவில்
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் அபிராமி அம்மனுடன் அமிர்தகடேஸ்வரர் அருள்பாலித்து வருகிறார். இந்த கோவிலில் குடமுழுக்கு நடத்த திட்டமிட்டு திருப்பணிகள் நடந்து வருகின்றன. இங்கு மணி விழா, சதாபிஷேகம், ஆயுஷ் ஹோமம் மற்றும் ஆயில் விருத்திக்கான யாகபூஜைகள் நடைபெறுவது சிறப்பம்சமாகும். பல்வேறு சிறப்பு பெற்ற கோவிலில் குடமுழுக்கை முன்னிட்டு 3 ராஜ கோபுரங்கள் உள்ளிட்ட அனைத்து சன்னதிகளுக்கும் பாலாலயம் நடந்தன. 
27-ந் தேதி குடமுழுக்கு
இந்த கோவிலில் வருகிற 27-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) குடமுழுக்கு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு கடந்த ஆண்டு ஜூலை மாதம் பந்தக்கால் முகூர்த்தம் நடத்தப்பட்டு திருப்பணிகள் தொடங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கோவில் வளாகத்தில் உள்ள அனைத்து கோபுரங்களும் புதுப்பித்து சிற்பங்கள் சீரமைக்கப்பட்டு புதிதாக வர்ணம் தீட்டி குடமுழுக்கு நடத்துவதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
இதனைத் தொடர்ந்து 23-ந்தேதி (புதன்கிழமை) யாகசாலை பூஜைகள் தொடங்கி, 27-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை 8 கால யாகசாலை பூஜைகள் நடைபெற உள்ளன. பணிகள் விரைந்து நடைபெற்று வருகிறது. 
இதற்கான ஹோமம் வளர்ப்பதற்காக யாகசாலை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனை தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் நேற்று பார்வையிட்டார். இவருடன் கோவில் குருக்கள் அலுவலர்கள் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்