மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து விவசாயி சாவு

கொரடாச்சேரி அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து விவசாயி உயிரிழந்தார்.

Update: 2022-03-17 18:20 GMT
கொரடாச்சேரி:
கொரடாச்சேரி அருகே திருவிடவாசல் கிராமத்தைச் சேர்ந்தவர் மேகநாதன் (வயது 58). விவசாயி. இவர் சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் வெண்ணவாசலில் இருந்து கமலாபுரத்தை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது இரட்டை மாரியம்மன் கோவில் என்ற பகுதியில் சென்ற போது நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து மேகநாதன் கீழே விழுந்து காயம் அடைந்தார். உடனே அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மேகநாதன் பரிதாபமாக இறந்தார்.  இதுகுறித்து அவரது மனைவி ஜீவா கொடுத்த புகாரின் பேரில் கொரடாச்சேரி  போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோ  மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்