பள்ளிபாளையத்தில் கடல் போல் காட்சி அளிக்கும் காவிரி ஆறு

பள்ளிபாளையத்தில் கடல் போல் காட்சி அளிக்கும் காவிரி ஆறு

Update: 2022-03-17 17:55 GMT
பள்ளிபாளையம்:
காவிரி ஆற்றின் குறுக்கே உள்ள சமயசங்கிலி நீரேற்று மின் நிலைய தடுப்பணையில் கடந்த வாரம் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. இதனால் பள்ளிபாளையம் பகுதியில் காவிரி ஆறு தண்ணீரின்றி பாறைகளாக காட்சி அளித்தது. இந்தநிலையில் சமயசங்கிலி நீரேற்று நிலைய தடுப்பணையில் இருந்து பராமரிப்பு பணி காரணமாக தண்ணீர் திறக்கப்பட்டது. மேலும் பள்ளிபாளையத்தை அடுத்துள்ள ஓடப்பள்ளி நீரேற்று மின் நிலைய தடுப்பணையில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. இதனால் பள்ளிபாளையத்தில் காவிரி ஆறு கடல் போல் காட்சி அளிக்கிறது. 

மேலும் செய்திகள்