வாடகை செலுத்தாத கடைகளுக்கு சீல்
பரமக்குடியில் வாடகை செலுத்தாத கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
பரமக்குடி,
பரமக்குடி மேலசத்திரம் பகுதியில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவில் இடத்தில் கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. இதில் 10 கடைக்காரர்கள் சில ஆண்டுகளாக வாடகை செலுத்தாமல் இருந்துள்ளனர். அவர்களை பலமுறை அறிவுறுத்தியும் வாடகை செலுத்தவில்லை. எனவே இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் முருகானந்தம் தலைமையில் அதிகாரிகள் அந்த கடைகளை பூட்டி சீல் வைத்தனர்.