ஓசூரில் தனியார் நிறுவன ஊழியரை தாக்கியவர் கைது
ஓசூரில் தனியார் நிறுவன ஊழியரை தாக்கியவர் கைது
ஓசூர்:
ஓசூர் குமுதேப்பள்ளி அருகே உள்ள மோரனப்பள்ளியை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 27), தனியார் நிறுவன ஊழியர். அதே பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (25). கடந்த 14-ந் தேதி இருவரது குடும்பத்தினர் இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த சதீஷ்குமார், சீனிவாசன் வீட்டு ஜன்னல் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தினார். மேலும் சீனிவாசனை கல்லால் தாக்கினார். இதில் காயம் அடைந்த சீனிவாசன் சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவர் கொடுத்த புகாரின் பேரில் ஓசூர் அட்கோ போலீசார் வழக்குப்பதிவு செய்து சதீஷ்குமாரை கைது செய்தனர்.