வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் பாராட்டு
மாநில அளவிலான பாரா ஒலிம்பிக் போட்டியில் வெற்றி பெற்றவர்களை கலெக்டர் பாராட்டினார்.;
ராமநாதபுரம்,
தமிழ்நாடு பாரா ஒலிம்பிக் விளையாட்டு சங்கம் சார்பில் சென்னையில் மாநில அளவிலான பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றது.
இதில் ராமநாதபுரம் மாவட்டம் சார்பாக விளையாட்டு வீரர்கள் நாகராஜன், களஞ்சியம் ஆகியோர் நீச்சல் போட்டிகளில் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்களும், கார்த்திக், சதாசிவம், முத்து காமாட்சி, முனீஸ்குமார் மற்றும் கருணாகரன் ஆகியோர் தடகள விளையாட்டில் 4 தங்கம், 4 வெள்ளி மற்றும் 2 வெண்கல பதக்கங்களும் வென்று ராமநாதபுரம் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர். இவர்கள் அனைவரும் ராமநாதபுரத்தில் மாவட்ட கலெக்டர் சங்கர்லால் குமாவத்தை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். வெற்றி பெற்ற வீரர்களை கலெக்டர் பாராட்டினார்.
விளையாட்டு வீரர்களின் பயிற்றுநர் ஆனந்த், மாவட்ட விளையாட்டு அலுவலர் செந்தில்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.