விபத்தில் வாலிபர் சாவு

ராமநாதபுரம் அருகே விபத்தில் வாலிபர் பலியானார்.

Update: 2022-03-17 17:30 GMT
ராமநாதபுரம்,

ராமநாதபுரம் பதினெட்டாம்படி கோவில் தெருவை சேர்ந்தவர் பிரான்சிஸ் பெர்ணான்டோ. இவருடைய மகன் அண்டோராஜ் பெர்ணான்டோ (வயது 31). வெளிநாட்டில் கப்பலில் தொழிலாளியாக வேலை பார்த்தவர்.விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த அவர் நேற்று முன்தினம் இரவு ராமநாதபுரம் அம்மன்கோவில் கிழக்கு கடற்கரை சாலை வழியாக மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சரக்கு ஏற்றிக்கொண்டு வந்த மினிசரக்கு வாகனம், மொபட்டின் மீது மோதியது. இதில் அண்டோராஜ் பெர்ணான்டோ சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார். இவருக்கு திருமணமாகி மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர். இதுகுறித்து அவரது அத்தை ஐரின்பெடசியா அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குபதிவு செய்து சரக்கு வாகன டிரைவர் வேதாளை நடுமனைக்காடு தங்கராஜ் மகன் அங்குச்சாமியை தேடிவருகின்றனர்.

மேலும் செய்திகள்