சூரனை வதம் செய்த முத்துமாரியம்மன்

கமுதி முத்துமாரியம்மன் கோவில் பங்குனி திருவிழாவில் சூரசம்ஹார விழா நடைபெற்றது.

Update: 2022-03-17 17:23 GMT
கமுதி, 

கமுதி முத்துமாரியம்மன் கோவில் பங்குனி திருவிழாவில் சூரசம்ஹார விழா நடைபெற்றது.

முத்துமாரியம்மன் கோவில்
 கமுதி சத்திரிய நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட முத்துமாரியம்மன் கோவிலில் பங்குனி திருவிழா கடந்த 9-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 22-ம் தேதி பொங்கல் திருவிழாவும், 23-ந்தேதி அக்னிச்சட்டி திருவிழாவும் நடைபெற உள்ளது.
திருவிழாவையொட்டி தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு குதிரை, ரிஷபம், யானை என ஒவ்வொரு நாளும் வெவ்வேறு வாகனங்களில் அம்மன் நகர் வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. 8-ம் நாள் திருவிழாவில் முத்துமாரியம்மன் சிம்மவாகனத்தில், அலங்கரிக்கப்பட்ட கண்ணாடி தேரில் இரண்டு மாடுகள் பூட்டப்பட்டு கமுதி நகரில் திருவீதி உலா வந்தார்.

சூரசம்ஹாரம்
பின்னர் கோவிலின் முன்பு சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நேற்று அதிகாலை 2 மணியளவில் நடைபெற்றது. சூரசம்ஹாரத்தின் போது சூரபத்மன், யானை, அரக்கன், எருமை, ஆடு, குதிரை உள்ளிட்ட 5 தலைகளை கொண்டு, அம்மனிடம் போரிடும் போது, சூரபத்மனை அம்மன் வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசித்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை சத்திரிய நாடார் உறவின் முறையார் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்