திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தை காலி குடங்களுடன் பெண்கள் முற்றுகை

திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தை காலி குடங்களுடன் பெண்கள் முற்றுகையிட்டனர்.;

Update: 2022-03-17 17:12 GMT
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாநகராட்சி 38-வது வார்டு, மேட்டுப்பட்டி அண்ணாநகரை சேர்ந்த பெண்கள் காலி குடங்களுடன் நேற்று மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதையடுத்து அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பெண்கள் கூறுகையில், அண்ணாநகரில் 40-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். நாங்கள் அடிபம்பு மற்றும் மோட்டாருடன் கூடிய ஆழ்துளை கிணற்றை தண்ணீருக்காக பயன்படுத்தி வருகிறோம். அதில் அடிபம்பு ஏற்கனவே பழுதடைந்த நிலையில், கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஆழ்துளை கிணற்றில் பொருத்தப்பட்ட மோட்டாரும் பழுதடைந்துவிட்டது. இதனால் குடிதண்ணீருக்கு சிரமப்படுகிறோம். மேலும் ஒரு குடம் தண்ணீரை ரூ.3 முதல் ரூ.5 வரை கொடுத்து வாங்கி பயன்படுத்தி வருகிறோம். எனவே மோட்டார் மற்றும் அடிபம்பை சரிசெய்ய வேண்டும் என்று கூறினர். இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள், தண்ணீர் பிரச்சினையை சரிசெய்வதாக உறுதியளித்தனர். அதன்பேரில் பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்